பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஊட்டுகால்வாய் மேடு பகுதியில் தோப்புக்குள் புகுந்து தென்னை மரங்களை சூறையாடிய சுள்ளி கொம்பன் யானை - சேதம் அடைந்த தென்னை மரங்களுக்கு கூடுதல் இழப்பிடு வழங்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையான சுள்ளி கொம்பன், அப்பகுதியை சுற்றியுள்ள தோப்புகளுக்குள் அவ்வப்போது புகுந்து வருகிறது. தென்னை, பலா, வாழை, புளியமரம் உள்ளிட்ட மரங்களை சூறையாடியும் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியும் வருகிறது.
இந்நிலையில் செல்லமுத்து, சிவகுமார், சந்தானம், ஜனார்த்தன பிரபு இவர்களின் தென்னந்தோப்புக்குகளில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக அங்கிருந்த மரங்களை சூறையாடி சேதப்படுத்தி உள்ளது. ஒற்றை யானையின் அட்டகாசம் தொடர்ந்து வருவதால் வன துறையினர் அதனை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேதம் அடைந்த தென்னைமரங்களுக்கு தமிழக அரசு கூடுதலாக இழப்புடுகள் தரவேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சுள்ளிகொம்பன் இரவு நேரங்களில் நடமாட்டம் உள்ளதால் தற்காலிகா மின் வேலியை வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் அமைத்துள்ளனா். இதுவரை சுள்ளி கொம்பன் 150 -க்கும் மேல் தென்னன மரங்களை சேதப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil