Pollachi Sexual Abuse Case protest in Tamilnadu : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடுமையாக தண்டனை அளிக்கக் கோரி போராட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ளது. வீடியோ காட்டி பணம் பறிப்பதும், அல்லது பாலியல் தேவைகளுக்கு பெண்களை பயன்படுத்துவதும் தான் இவர்களின் கொடூர நடத்தை என்ற திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது.
இளம் பெண் ஒருவரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அடுக்கடுக்காக கொடூரர்களின் கோர முகம் அம்பலமாகி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சபரிராஜன், (வயது 25) திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Pollachi Sexual Abuse Case : பொள்ளாச்சி பாலொயல் வன்கொடுமை எதிர்த்து போராட்டம்
பின்னர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோவை எஸ்.பி முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
இது குறித்து படிக்க : 'பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன்' - பொள்ளாச்சி ஜெயராமன்
இந்த கொடூரச் செயலை அடுத்து இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றவாளிகள் அனைவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
4.00 PM : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
பொள்ளாச்சி விவகாரத்தில் விரைவான விசாரணையும் கடும் நடவடிக்கையும் தேவை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
பெண்களின் வாழ்க்கையை சீரழித்து தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வரும்,துணை முதல்வரும் வாய் திறக்கவில்லை, ஏன்?
முதலில் CBCID, பிறகு CBI என ஆட்சியாளர்கள் பதறுகிறார்கள். கண்துடைப்பு நாடகங்கள் வேண்டாம்! விரைவான விசாரணையும்,கடும் நடவடிக்கையுமே தேவை.
— M.K.Stalin (@mkstalin) 13 March 2019
1.00 PM : நாகராஜ் பார் அடித்து நொறுக்கப்பட்டது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாகராஜ் என்பவருக்கு சொந்தமான பார் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. கோட்டூர்புரம் சாலையில் உள்ள அவரது பார் சூறையாடப்பட்டது. பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படும் நாகராஜ் என்பவர் மீது கொந்தளிப்பிலிருந்த அப்பகுதி மக்கள் இன்று காலை பாரின் உள்ளே புகுந்து அனைத்து பொருட்கள் மற்றும் டேபிள் சேர்களை அடித்து நொறுக்கினார்கள்.
12.45 PM : பொள்ளாச்சியில் திரண்ட மாணவர்கள் போராட்டம்
பொள்ளாச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியே போராட்ட களமாக உருவெடுத்துள்ளது.
11.30 AM : மதுரவாயில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை எதிர்த்து மதுரவாயிலில் உள்ள எம்.ஜி.ஆர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
11.05 AM : திருவாரூர் மாணவர்கள் போராட்டம்
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய தண்டனை வழங்க வலியுறுத்தி திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
10.30 AM : திருமாவளவன் தலைமையில் ஆர்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கை நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்கக்கோரி சென்னையில் மார்ச் 15 ஆம் தேதி விசிக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
9:15 AM : வைகோ வலியுறுத்தல்
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு தண்டிக்கப்பட வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
9:15 AM : மாணவர்கள் போராட்டம்
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடையவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 1000 பேர் கல்லூரி வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டம். மேலும் இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தி குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் விரைந்து கைது செய்யக்கோரி உடுமலையில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
9:00 AM : கனிமொழி மீது வழக்கு பதிவு
பொள்ளாச்சியில் நேற்று அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீது 2 பிரிவுகளின் கீழ் காவல்கிணறு போலீசார் வழக்குப்பதிவு. அனுமதியின்றி கூடுதல், சட்டத்துக்கு புறம்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு.
8:30 AM : கனிமொழி போராட்டம்
திமுக எம்.பி கனிமொழி தலைமையில் நேற்று பொள்ளாச்சியில் மிகப்பெரிய போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.