Advertisment

Pollachi Sexual Assault: பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்: கனிமொழி

Pollachi Sexual Assault Shocking Informations Live Updates : பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pollachi Sexual Harassment Case

Pollachi Sexual Harassment Case

Pollachi Sexual Assault Live Updates : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நடைபெற்று விசாரணை மற்றும் வெளியாகும் பல ஆதாரங்களால் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகிறது.

Advertisment

கடந்த சில வருடங்களாக அப்பாவி பெண்களை காதல் என்ற பெயரால் போலி அன்பு காட்டி, ஏமாற்றி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது கும்பல். மேலும், அதனை வீடியோவாக பதிவு செய்து அதை வைத்து இளம் பெண்களை மிரட்டி பணம் சம்பாதிப்பது, மீண்டும் பாலியல் தொந்தரவு தருவதாகவும் இருந்துள்ளனர் இந்த கொடூரர்கள்.

அடுக்கடுக்காக வெளியாகும் ஆதாரங்களால் வெளிவரும் தகவல்கள் மனதை நிலைக்குளையச் செய்கிறது. இதனால் கோபத்தில் கொந்தளித்துள்ளது பொள்ளாச்சி. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டும், குற்றாவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

Pollachi Sexual Assault Live Updates : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு

குறிப்பாக பொள்ளாச்சியில், மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு துணைப் போனதாக கூறப்படும் அதிமுகவை சேர்ந்த பார் நாகராஜனை அதிமுக கட்சியை விட்டு நீக்கியது. மேலும் நாகராஜனுக்கு சொந்தமான பாரை, பொதுமக்கள் சூரையாடினர்.

3.11 PM - கனிமொழி பேட்டி. 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

2.14 PM - தினகரன் பேட்டி

“பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக, திமுகவிற்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும்; அப்போது உண்மைகள் வெளிவரும். பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை” என தினகரன் கூறியுள்ளார்.

1:21 PM - முதலமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம்

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

12:20 PM - சிபிஐ-க்கு மாற்றியதில் சந்தேகம்

யாரையோ காப்பாற்றுவதற்காக தமிழக அரசு பொள்ளாச்சி வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளதாக சந்தேகம் எழுகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

11.30 AM : பொள்ளாச்சி வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பிப்பு

11.15 AM : நீதிமன்றம் விசாரணை கோரிக்கை நிராகரிப்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பட்டது. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளாதாகக் கூறி, கோரிக்கையை நிராகரித்தார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

10.50 AM : 2 பிரிவுகளாக சிபிசிஐடி விசாரணை

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் 2 பிரிவுகளாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பிரிவினர் கோவை மற்றும் பொள்ளாச்சியில் விசாரணை நடத்துகின்றனர், மற்றொரு பிரிவினர் குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

10.30 AM : பாதிக்கப்பட்டவர்கள் புகார் எண்

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் 044-2855155, 044-28592750 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என மாநில மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

10.00 AM : ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கும் பாதிப்பு

பொள்ளாச்சி விவகாரத்தில் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களும் பாதிக்கப்பட்டு, கும்பலிடம் சிக்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

9.30 AM : பலத்த போலீஸ் பாதுகாப்பு

பொள்ளாச்சி முழுவதும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கிய பகுதிகள், கல்லூரிகள் மற்றும் பார் நாகராஜ் வீடு உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Coimbatore Pollachi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment