/tamil-ie/media/media_files/uploads/2019/03/Pollachi-Sexual-Assault-Live-Updates.jpg)
Pollachi Sexual Assault Live Updates
Pollachi Sexual Assault : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக தமிழகமே ஒன்று கூடி எதிர்ப்பு குரலை ஓங்கி வருகிறது.
பள்ளி மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பலுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மாணவர்கள் படையே பொள்ளாச்சியை போராட்டக் களமாக மாற்றியிருக்கிறது.
பெண் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்: கனிமொழி
பெண்களை காதல் என போலி அன்பு செலுத்தி அவர்களை ஏமாற்றி மிரட்டி வந்த இந்த கும்பல் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் கொந்தளித்துள்ளனர்.
Pollachi Sexual Assault : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு
9.30 AM : திருநாவுக்கரசை விசாரிக்க மனு
பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு அளித்தது. சிபிசிஐடி போலீசாரின் மனு இன்று விசாரணைக்கு வருவதால் நீதிமன்றத்தில் திருநாவுக்கரசை ஆஜர்படுத்த வாய்ப்பு உள்ளது.
8.30 AM : கமல்ஹாசன் வீடியோ
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏன் காத்திருக்கிறீர்கள் என்ற கேள்வி உட்பட பல கேள்விகளை எழுப்பி வீடியோ பதிவிட்டிருக்கிறார்.
— Kamal Haasan (@ikamalhaasan) 14 March 2019
8.00 AM : சிபிஐ-க்கு மாற்றம்
சிபிசிஐடி விசாரித்து வந்த இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவு அளித்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.