/tamil-ie/media/media_files/uploads/2019/04/z133.jpg)
cbi raid in tirunavukkarasu house
cbi raid in tirunavukkarasu house : பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் கைது செயய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 27ம் தேதி சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கில் கைது செயய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை சாலையை அடுத்த சின்னப்பம்பாளையம் பகுதியிலுள்ள திருநாவுக்கரசுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் கருணாநிதி தலைமையிலான 4 சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த வந்த சிபிசிஐடி போலீசார் திருநாவுக்கரசு வீட்டில் முதன்முதலில் நடத்திய ஆய்வு தொடர்பான அறிக்கையை சிபிஐ வசம் சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐயிடம் மாற்றப்பட்ட பிறகு முதன் முறையாக திருநாவுக்கரசு வீட்டில் தற்போது சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.