/tamil-ie/media/media_files/uploads/2022/08/tamil-indian-express-2022-08-05T131806.035.jpg)
Pollachi: two-wheeler swept away in flood; Shocking video
Pollachi Tamil News: கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினகளாக கன மழை பெய்து வருவதால் ஆழியார் அணையிலிருந்து இன்று 11 மதகுகள் வழியாக உபநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அம்பராம்பாளையம் - பொள்ளாச்சி ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் வருகிறது.
இதைத்தொடர்ந்து, மீனாட்சிபுரம் மற்றும் கோபாலபுரம் வழியாக செல்லும் பாலத்தில் அதிகமாக பாலம் மூழ்க்கும்படி நீர் செல்கிறது. பொதுமக்கள் பாலத்தை கடக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக கடக்கும்படி காவல் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் ஒளிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்தும் வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று மாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை திடீரென வெள்ளம் அடித்துசென்றது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகாகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
#WATCH || பொள்ளாச்சி: டூவீலருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்; அதிர்ச்சி வீடியோhttps://t.co/gkgoZMIuaK | #pollachirain | #FloodSituation | @rahman14331pic.twitter.com/rwxYZnEm4J
— Indian Express Tamil (@IeTamil) August 5, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.