கோவை – பொள்ளாச்சி: தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு பூ, காய்கறிகள், பழவகைகள், பால் என அத்தியாவசிய பொருட்கள் தினசரி செல்கிறது. பொள்ளாச்சி அருகே உள்ள நடுப்புனி,கோபாலபுரம்,கோவிந்தாபுரம்,மீனாட்சிபுரம்,செம்பனாபதி என சோதனை சாவடிகள் உள்ளன. சோதனை சாவடிகளில் போலீசார், வனத்துறையினர், சுகாதாரத் துறையினர், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்,
இதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் இருந்து தனியாருக்கு சொந்தமான தனியார் ட்ரான்ஸ்போர்ட் டேங்கர் லாரி பொள்ளாச்சி வழியாக மீனாட்சிபுரம் சோதனை சாவடி சென்ற போது பாலக்காடு மாவட்டம் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் டேங்கர் லாரியில் இருந்த பால் சோதனை செய்தபோது பாலில் கொழுப்பு தன்மைக்காக யூரியா கலந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
லாரியில் இருந்த யூரியா கலந்த 12,750- லிட்டர் பால் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் சோதனைச் சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுமையாக சோதனை செய்து வருகின்றனர். பாலில் யூரியா கலந்த சம்பவம் தமிழக கேரளா எல்லையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#Video || உயிர் காக்கும் பாலில் நஞ்சு: யூரியா கலந்த 12,750 லிட்டர் பால் கேரள எல்லையில் பறிமுதல்!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #Kerala | #MILK | 📹 @rahman14331 pic.twitter.com/3iTszQ3A4b
— Indian Express Tamil (@IeTamil) August 20, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil