Pollachi | Valparai: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஆழியார் மற்றும் வால்பாறை சின்னக்கல்லார், சோலையார் கேரளா எல்லை மலக்குப்பாறை போன்ற பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது நீர் பிடிப்பு பகுதிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் மலைப்பாதைகளில் வரும்பொழுது சாலை ஓரம் வாகனங்கள் நிறுத்தக்கூடாது மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கவனமாக வாகனங்களில் வரவேண்டும் என வனத்துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினர் அறிவுறுத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 16வது கொண்டை ஊசி வளைவில் திடீரென பாறைகள் உருண்டு சாலையில் வந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சாலையில் உள்ள பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இடத்தில் வாகனம் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“