தமிழக அரசு வனப் பகுதியில் உள்ள வரையாடுகளை பாதுகாக்கும் விதமாக ரூ.8 கோடி தனி நிதி ஒதுக்கி வனத்துறை உயர் அதிகாரிகளை நியமித்துள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு உட்பட்ட 2-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 10-வது கொண்டை ஊசி வரை வரையாடுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். 9-வது கொண்டை ஊசி வளைவில் ஆழியார் அணையை கண்டு களிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சி முனை உள்ளது. தற்போது முழுமையாக பழுது அடைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் நின்று புகைப்படம் எடுப்பதால் அங்கு வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இந்நிலையில்,
சாலையில் சுற்றி வரும் வரையாடுகளை சுற்றுலா பயணிகள் அருகில் சென்று போட்டோ எடுப்பதும், வரையாடுகளை தொந்தரவு செய்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், அங்குள்ள வரையாடு ஒன்றின் இடது கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அதை வனத் துறையினர் மீட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வன விலங்குகளை தொந்தரவு செய்யும் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“