ஸ்டெர்லைட் விவகாரம் : ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக் கோரி நடந்த வன்முறையில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட அரசாணை பிறப்பித்தது. மேலும் நிரந்தரமாக ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு.
Advertisment
பசுமை தீர்ப்பாயத்தின் மனு - ஸ்டெர்லைட் விவகாரம்
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமைத் தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. பசுமைத் தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதனை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசின் வாதத்தினை கேட்காமல் எப்படி எப்படி இந்த உத்தரவினை பிறப்பிக்கலாம்? “ என்று கேள்வி எழுப்பியது.
Advertisment
Advertisements
வேதாந்தா தரப்பில் ஆஜரான வக்கீல் “பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தன்னுடைய வாதத்தினை முன் வைத்திருந்தது எனவும், அதனை தீர்ப்பாயம் ஏற்க மறுத்துவிட்டது என்றும் “ கூறினார்.
ஸ்டெர்லைட் விவகாரம் - விசாரணைக்குத் தடையில்லை
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி “தமிழக அரசின் வாதத்தினை தேசிய பசுமைத் தீர்பாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆனால் ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை கூற இயலாது” என்று கூறியும் தீர்ப்பினை வழங்கியது உச்ச நீதிமன்றம்.