Advertisment

சிலைக் கடத்தல் வழக்கை விசாரிக்க பொன்.மாணிக்கவேலுக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம் அதிரடி

author-image
WebDesk
Apr 12, 2019 11:47 IST
Tamil Nadu News Today

Tamil Nadu News Today

Statue Smuggling Case: சிலைக் கடத்தல் வழக்கை சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisment

தமிழகத்தில் அதிகரித்து வரும் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்காக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.

அவர் விளம்பர நோக்கில் செயல்படுவதாகவும், முறையாக வழக்குகளை விசாரிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டி, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலின் நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சிலைக்கடத்தல் வழக்கை, சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து விசாரிக்கலாம் என்றும், ஆனால் குற்றவாளிகளை கைது செய்ய அவருக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற உத்தரவிடக்கோரிய தமிழக அரசின் அரசாணையையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

#Pon Manikkavel #Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment