Advertisment

பேரறிஞர் அண்ணா, சிட்டிபாபு குடும்பத்தில் யாரேனும் திமுகவில் இருக்கிறார்களா? பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி

திமுக குடும்ப ஆட்சித்தான் நடத்துகிறது என மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அப்படியென்றால் எமர்ஜென்சியில் கொல்லப்பட்ட சிட்டிபாபு, திமுக நிறுவனத் தலைவர் சி.என். அணணாத்துரை இவர்களின் குடும்பங்களை சேர்ந்த எவரேனும் திமுகவில் உயர்பதவிகளில் இருக்கிறார்களா? என பொன். ராதாகிருஷ்ணன் கேள்வியெழுப்பினார்.

author-image
WebDesk
New Update
Pon Radhakrishnan questioned whether anyone from the family of Anna Chitibabu is in the DMK

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் (கோப்பு படம்).

தஞ்சையில் மத்திய அரசின் திட்டத்தினால் பயன்பெற்ற பயனாளிகளை சந்தித்து பொன். ராதாகிருஷ்ணன் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பிரதமர் நாட்டு மக்கள் 140 கோடி பேருக்கும் திட்டம் தீட்டிவருகிறார். அவரின் 9 ஆண்டுகால ஆட்சியில் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Advertisment

தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கூட்டம் தொடர்பாக விமர்சித்த பொன். ராதாகிருஷ்ணன், “அவர்கள் கூடுவார்கள், பின்னர் கலைந்துவிடுவார்கள். வேலை இல்லாத நபர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
திமுக குடும்ப ஆட்சி நடத்துகிறது என்கிறார் மு.க. ஸ்டாலின். திமுகவுக்காக எமர்ஜென்சி காலத்தில் உயிரை விட்ட சிட்டிபாபு அல்லது சி.என். அண்ணாத்துரை குடும்பத்தில் யாரேனும் கட்சியில் இருக்கிறார்களா? எனக் கேள்வியெழுப்பினார்.

பின்னர், “சிதம்பரம் கனசபை விவகாரத்தில் பேசி தீர்வு காண வேண்டும். இதனை அரசியலாக்க கூடாது” எனக் கேட்டுக்கொண்டார். மேலும், மணிப்பூர் விவகாரத்தை தீர்க்க உள்துறை அமைச்சர் அமத் ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதை விமர்சிப்பது தவறு” என்றார்.

இதற்கிடையில், “ஆளுனர் பேசும் அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது. அவர் உண்மையை பேசுவதால் சிலருக்கு கசக்கிறது” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Thanjavur Pon Radhakrishnan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment