மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சராக பணியாற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 27 வருடங்கள் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன் “ராஜீவ் காந்தி கொலைக்கு மட்டுமல்லாமல் 2009ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.”
ஏழு பேர் விடுதலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்
ஏழு பேரின் விடுதலை குறித்து ஒவ்வொருவரும் ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் 7 பேரையும் விடுதலை செய்யக் கூட்டாது என்று கூறுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பினால் செய்யுங்கள் என்று கூறுகிறார் என பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொள்காட்டிப் பேசினார்.
இலங்கை இறுதிப் போரில் இலங்கை ராணுவம் வெற்றிபெற இந்தியா உதவியது என ராஜபக்சவே கூறிவிட்டார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியே இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு காரணம். இதனை பிரபாகரனே திரும்பி வந்து சொல்ல வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார்.
ஏழு பேரின் விடுதலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும், காங்கிரஸ் கட்சி 7 பேரையும் விடுவிக்க வேண்டாம் என்று கூறும் போது திமுக அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்றும் பொன். ராதாகிருஷ்ணன் ஊடகவியலாளர்களிடம் பேசியுள்ளார்.