scorecardresearch

புதுவையில் 106 டிகிரியை எட்டிய வெயில்: மக்கள் கடும் அவதி

கடந்த ஒரு வார மேலாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. நேற்றைய தினம் 106 டிகிரி வெயில் புதுவையில் பதிவானது.

106 டிகிரியை எட்டிய வெயில்
106 டிகிரியை எட்டிய வெயில்

புதுவையில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கியது.ஏப்ரல்மாத இறுதியில் இடி, மின்னலுடன் கடுமையான கோடை மழையும் புதுவையில் ஒரு சில நாட்கள் பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. இதனால் ஒரு சில நாட்கள் காலையில் குளிர்ந்த காற்று வீசியது. ஆனாலும் நேரம் செல்ல செல்ல பகல் பொழுதுககளில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 4ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கியது. கத்திரி வெயிலின் ஆரம்பத்தில் வெப்பம் பெரியளவில் தெரியவில்லை. இதனால் மக்கள் பெருமூச்சமடைந்தனர். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் அளவு கடுமையாக அதிகரித்து வந்தது.

கடந்த ஒரு வார மேலாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானது. நேற்றைய தினம் 106 டிகிரி வெயில் புதுவையில் பதிவானது. வெயிலின் தாக்கத்தோடு, அனல் காற்றும் வீசுகிறது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

ஏற்கனவே கோடை விடுமுறை என்பதால் வீடுகளில் பிள்ளைகள் முடங்கியுள்ளனர். இன்றும் காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயிலின் அளவு கூடிக்கொண்டே இருந்தது.  கடும் கோடை வெப்பம் காரணமாக வீடுகளில் தண்ணீர் தொட்டிகளில் தேக்கி வைக்கும் தண்ணீர் கூட சூடாக வருகிறது.

குளிக்கவும், குடிநீருக்கு பயன்படுத்தும் போது வெந்நீராக உள்ளது. இதனால் மக்கள் ப்ரிட்ஜ் வாட்டரை பயன்படுத்துகினற்னர். பிரிட்ஜ் பயன்படுத்த முடியாத ஏழைகள் மண்பானை தண்ணீரை உபயோகப்படுத்துவது அதிகரித்துள்ளது. இதற்காகக குழாய் பொருத்திய மண்பானைகளை அதிகளவில் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pondicherry summer heat reaches 106 celsius