தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாள்களில் ஒட்டுமொத்தமாக 675கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதில், பொங்கல் தினத்தன்று மட்டும் 317 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஜோராக அரங்கேறியுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு திருவள்ளுவர் தினம் (ஜனவரி 15), ஞாயிறு முழு ஊரடங்கு (ஜனவரி 16) ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை என்பதால், இந்த அளவுக்கு மது விற்பனை அதிமாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் சனிக்கிழமை, திருவள்ளூரில் மாநில எல்லைக்கு அருகில் வசிக்கும் மது பிரியர்கள், ஆந்திராவில் உள்ள கடைக்கு சென்று மதுபானம் வாங்கி வந்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.
கடந்தாண்டு போகி, பொங்கல், காணும் பொங்கள் தினங்களில் மொத்தம் ரூ590 கோடிக்கு தான் மதுவிற்பனை ஆகியுள்ளது. தற்போது, இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் வட்டாரங்களின்படி, ஜனவரி 14 அன்று அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 68.76 கோடி ரூபாய்க்கும்,திருச்சி மண்டலத்தில் 65.5 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 63.9 கோடி ரூபாய்க்கும், கோவையில் 59.6 கோடி ரூபாய்க்கும், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் மொத்தமாக 59.2 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. ஜனவரி 13 அன்று 5 மண்டலங்களிலும் மொத்தமாக 203 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது. அதில், அதிகப்பட்சமாக மதுரை மண்டலத்தில் 42.7 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் 40.6 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
குறிப்பாக,ரூ120 முதல் ரூ140 வரையிலான சாதாரண மற்றும் மிட் ரெஞ்ச் மதுபானங்களை அதிகளவில் வாங்கியுள்ளனர். அதே போல், விஸ்கியை தொடர்ந்து பிராண்டியின் விற்பனையும் ஜோராக நடந்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் 375ml மற்றும் 750ml பாட்டில்களின் இருப்பு குறைந்து தேவை அதிகரித்த நிலையில், 180ml பாட்டிகளின் விற்பனை சூடிபிடித்தது.
மறுபுறம், திருவள்ளூர் மாவட்டத்தில் மாநில எல்லையில் உள்ள ஆர்கே பேட், பள்ளிப்பட்டு ஆகிய பகுதி மக்கள், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், சனிக்கிழமையே ஆந்திராவுக்கு சென்று மதுபானம் வாங்கி வந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil