Advertisment

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு; ரூ.163.81 கோடி ஒதுக்கி ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் மிகை ஊதியம் வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார்.

author-image
WebDesk
New Update
mk stalin secretariate

தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் மற்றும் மிகை ஊதியம் வழங்க ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார். மேலும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-2024-ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த உத்தரவின்படி, 1) 'சி' மற்றும் 'டி' பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

2) தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் 2023-2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.

Advertisment
Advertisement

3) "சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment