பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெண்களின் வங்கிக் கணக்கில் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது. பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 1000 வரவு வைக்கும் பணி இன்றே தொடங்கியது.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி தேதி, குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த ஆண்டு 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், 19 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன்பாக 11, 12 ஆம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் வங்கிகள் விடுமுறை தினம் ஆகும்.
எனவே, இன்றும், நாளையும், மகளிர் உரிமைத்தொகைக்கான ரூ. 1000 அனைத்து பெண்களின் அக்கவுண்ட்களுக்கும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்றே, மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல பொங்கல் பரிசுத்தொகுப்பும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதிக்கு பதிலாக 10ஆம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மகளிர் உரிமைத் தொகை ஜனவரி. 9,10 ஆம் தேதிகள் வரவு வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பொங்கலுக்கு முன்பாகவே ரூ. 1000 வரவு வைக்கப்பட்டது பெண்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“