பொங்கல் விழாவில் கயிறு இழுத்தல் போட்டியில் கயிறு அறுந்து மேயர், துணை மேயர், ஆணையர் கீழே விழுந்து மண்ணை கவ்விய சம்பவம் தஞ்சையை கலகலக்க வைத்தது.
தமிழகத்தில் பொங்கல் திருநாளை அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் பொதுமக்கள் சமூக நல அமைப்புகள் நேற்று முதலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், தஞ்சை மாநகராட்சியில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மியூசிக்கல் சேர், லெமன் ஸ்பூன்லிங், உறியடிப்போட்டி, சாக்கு போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, என பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் கயிறு இழுத்தல் போட்டியில் ஆண்கள் பெண்கள் என சரிசமம் என்று நிரூபிக்கும் வகையில் ஒருபுறம் மேயர் சன். ராமநாதன் மற்றும் ஆண் மாமன்ற உறுப்பினர்களும் மற்றொருபுறம் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் உமா மகேஸ்வரி மற்றும் பெண் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் இருவரும் தங்களுடைய பலத்தை நிரூபிக்க போட்டி போட்டுக்கொண்டு கயிறை இழுத்தனர். இதில் சட்டென்று கயிறு அருந்தது. இதில் மேயர், துணை மேயர், ஆணையர் உட்பட அனைவரும் கீழே விழுந்து மண்ணை கவ்வினர். இந்த கலகல சம்பவம் அங்கு கூடி நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இடையே பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஆண்களுக்கு பெண்கள் நிகர் என இந்த போட்டியின் மூலம் நிரூபிக்கப்பட்டது என பெண் பங்கேற்பாளர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“