தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் வருகிற 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு ஜனவரி 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலான 6 நாட்களுக்கு அரசு விடுமுறையை அறிவித்து உள்ளது.
தொடர் விடுமுறையை அடுத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. இதேபோல், தென்னக ரயில்வே சார்பில் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் விமானக் கட்டணங்கள் பல மடங்குக்குகள் உயர்ந்துள்ளது. இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை முதல் மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு பறக்கும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னை - மதுரை
வழக்கமான கட்டணம் - ரூ.3,999
இன்றைய கட்டணம் - ரூ.17,645
சென்னை - திருச்சி
வழக்கமான கட்டணம் - ரூ.2,199
இன்றைய கட்டணம் - ரூ.14,337
சென்னை - கோவை
வழக்கமான கட்டணம் - ரூ.3,485
இன்றைய கட்டணம் - ரூ.16,647
சென்னை - தூத்துக்குடி
வழக்கமான கட்டணம் - ரூ.4,199
இன்றைய கட்டணம் - ரூ.12,866
சென்னை - திருவனந்தபுரம்
வழக்கமான கட்டணம் - ரூ.3,296
இன்றைய கட்டணம் - ரூ.17,771
சென்னை - சேலம்
வழக்கமான கட்டணம் - ரூ.2,799
இன்றைய கட்டணம் - ரூ.9,579.