கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடியில் வெளிநாட்டினர் மற்றும் மும்மத குருமார்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடியில் வெளிநாட்டினர் மற்றும் மும்மத குருமார்கள் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நாட்டுப்புற கலைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ஆட்சியரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Advertisment
கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடி ஊர் பொதுமக்கள் சார்பில் 56 ஆவது பொங்கல் விழா சனிக்கிழமை (ஜன.14) நடைபெற்றது இதில் ரஷ்யா, மலேசியா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த வெளிநாட்டினரும் மும்மத தலைவர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி பொங்கல் விழாவில் கலந்துகொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று குலவை சத்தமிட்டனர். பின்னர் பாரம்பரிய கலைகளான சிலம்பம் பரதம், பறை இசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/