தமிழ்நாட்டில் வரும் 2025 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பொங்கல் தொகுப்பை வழங்க தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டிற்கான பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்தும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் என்னவெல்லாம் இருக்கிறது என்றும் கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கி கூறியுள்ளார்.
கூட்டுறவுத்துறை சார்பில் பொங்கல் சிறப்பு தொகுப்புகள் இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் என்று கூறினார்.
அதன்படி ரூ.199 இனிப்பு பொங்கல் தொகுப்பு பச்சரிசி, வெள்ளம், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருட்கள் கொண்டது இனிப்பு பொங்கல் தொகுப்பாகவும்.
ரூ. 499 கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுந்தம் பருப்பு, மிளகு, வெந்தயம், சோம்பு, கடுகு, மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு, சீரகம் 19 பொருட்கள் கொண்டது கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பாகும்.
ரூ.999 பெரும் பொங்கல் தொகுப்பு மஞ்சள் தூள், சர்க்கரை, உப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை பட்டாணி, பாசிப்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மிளகாய், புளி, தனியா, கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், சோம்பு, ஏலக்காய், கடலை எண்ணெய், வரகு, சாமை, திணை, ரவை, அவல், ராகி மாவு, கோதுமை மாவு, ஜவ்வரிசி, வறுத்த சேமியா, மல்லித்தூள், சாம்பார் தூள், மிளகாய் தூள், பெருங்காயத்தூள், கைப்பை என 35 பொருட்கள் கொண்டதாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“