தமிழகம் முழுவதும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடினார்கள். ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புத்தாடை அணிந்து பொங்கலிட்டு கொண்டாடினார்கள்.

ஊழவர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அறுவடை திருவிழா என்ற பெயரும் இதற்கு உண்டு.

சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வாசலில் கோலமிட்டு, வீட்டு முற்றத்தில் புதுப்பானையில் பொங்கலிட்டு, படையல் வைத்து சூரியனை வணங்கினார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் கரும்பு சாப்பிட்டு, ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

கிராமப்புறங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் தங்கி பணியாற்றி வருபவர்கள் சொந்த ஊருக்குச் சென்று பொங்கல் வைத்து கொண்டாடினர். அனைத்து அரசியல் கட்சியினரும் பொங்கலை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பொங்கல் விழாவில் முக்கியமான பங்கு வகிப்பது விளையாட்டுப் போட்டிக்கள். கிராமங்களில் வழுக்கு மரம் ஏறுவது, மெதுவாக சைக்கிள் ஓட்டுவது, ஓட்டப்பந்தயம், உரியடி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்கள் மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கிராமிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர்.

மதுரை அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவது வாடிக்கை. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுக்கச் சொல்லி, மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஒன்று திரண்டு போராடி வெற்றி பெற்றனர். இதனால் மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு மாடுகளை அடக்கி வருகின்றனர்.

×Close
×Close