பொங்கல் பரிசித் தொகை வழங்க தமிழக அரசு ரூ. 2,436 கோடி நிதி ஒதிக்கி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்லல் பரிசு வழங்கும் நிகழ்வை ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இன்று முதல் வரும் 13ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக வழக்கமான விடுமுறை நாளான வரும் 12ம் தேதியும் , ரேஷன் கடை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்குச் சென்று, பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தால் அரசுக்கு ரூ. 2,436 கோடி செலவினம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்கள் என 2,19,71,113 கோடி பேர் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“