தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்தவகையில் 2023-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
வரும் ஜனவரி 2-ம் தேதி பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொங்கல் பரிசு அந்தந்த பகுதி நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசலை தடுக்க டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் இன்று (டிசம்பர் 27) தொடங்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்படுகிறது. தெரு வாரியாக, வரிசை எண் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் எந்த நாளில், எந்த நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு வாங்க வேண்டும் எனவும் குறிப்பிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/