TN Pongal Gift Package | Sugarcane in Pongal Gift | தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும். அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்தவகையில் 2023-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 ரொக்கம், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, முழு கரும்பு ஒன்று வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதன் மூலம் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசலை தடுக்க டோக்கன் விநியோகிக்கப்பட்டு பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. இன்று (ஜனவரி 3) முதல் ஜனவரி 8-ம் தேதி வரை டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜனவரி 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக ஜனவரி 2-ம் தேதி டோக்கன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரும்பு கொள்முதல் காரணமாக டோக்கன் வழங்கும் தேதி மாற்றப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/