/tamil-ie/media/media_files/uploads/2018/07/edappadi-palaniswami....jpg)
Tamil Nadu news today live updates
Pongal Festival Gift Package for All Families: தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க இருப்பதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தினத்தன்று, தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அரசு சார்பில் இலவசப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பச்சரிசி, கரும்புத் துண்டு மற்றும் சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கத் தேவையான பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. மொத்தம் 7 பொருட்கள் அந்தப் பரிசுத் தொகுப்பில் இடம் பெறுகின்றன.
தமிழ்நாட்டின் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை அகதி முகாம்களில் தங்கி இருப்பவர்களுக்கும் இந்தத் தொகுப்பு கிடைக்கும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே இதனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் அவரவர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இந்தப் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 22) வெளியிட்ட அறிவிப்பில் இந்தத் தகவல்களை கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.