கைரேகை பதிவு கட்டாயம்: பொங்கல் பரிசு பெற ரேஷன் கடைக்கு போகும் முன்பு இதை எல்லாம் கவனிங்க!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு உடன் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்தை தமிழக அரசு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கைரேகை பதிவு கட்டாயம்: பொங்கல் பரிசு பெற ரேஷன் கடைக்கு போகும் முன்பு இதை எல்லாம் கவனிங்க!
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு

2023ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில், தமிழக மக்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி முதல் 8 ஆம் வரை நடைபெறும் என்றும், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி 9 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்.

பொங்கலுக்கு முன் அனைவருக்கும் பரிசு தொகுப்புடன் ரூ.1000 கிடைக்கும் விதத்தில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டதும் அவர்களது கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

பொங்கல் பரிசு கொடுக்கும் வேளையில் ரேஷன் கடைகளை சரியான நேரத்தில் திறந்து, வரிசையில் காத்திருக்கும் அனைவருக்கும் தவறாமல் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பொங்கல் பரிசு மற்றும் ரொக்க தொகை பெரும்பொழுது, பொதுமக்களுக்கு ஏதேனும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகியவை மூலம் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pongal gift package for ration card holders 2023

Exit mobile version