Advertisment

பொங்கல் வாழ்த்து போஸ்டர் ஒட்டிய கோவை நாம் தமிழர் மீது தாக்குதல்: சீமான் கடும் கண்டனம்

பொங்கல் வாழ்த்து சுவரொட்டி ஒட்டிய கோவை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க-வினரை கைது செய்ய சீமான் வலியுறுத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pongal greeting poster Coimbatore Nam Tamilar cadre attacked Seeman condemns Tamil News

கோவையில் பொங்கல் வாழ்த்து சுவரொட்டி ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

coimbatore: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை இன்று பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவை நீலிகோணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஆசிக் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் பொங்கல் வாழ்த்து சுவரொட்டிகளை நள்ளிரவு ஒட்டி வந்துள்ளனர். 

அப்போது அங்கு வந்த பா.ஜ.க-வினர் சிலர் இருவரையும் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் புகார் அளிப்பதற்கு திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.  பின்னர் காவல்துறையினர் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். 

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமை ஒழுங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சியினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பா.ஜ.க-வினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து விரைந்து கைது செய்ய வேண்டும். மேலும் தமிழர் ஒற்றுமையை சீர்குலைத்து மதக்கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் அடைய துடிக்கும் பா.ஜ.க-வின் இழிவான செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவெறி அமைப்புகளின் வன்முறை செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், அவர் இது தான் தமிழ்நாட்டில் பாஜக வரவிடாமல் தடுக்கும் திராவிட மாடல் அரசின் செயல்முறையா? என கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையில் இந்துத்துவ அமைப்புகளுக்கு திமுக அரசு தரும் மறைமுக ஆதரவே மாற்றுக் கட்சியினரை தாக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பாஜக வளர முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“ 

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment