Advertisment

பொங்கல் பண்டிகைக்கு செம்ம ட்ரீட் கொடுத்த அரசு... ஹோல் சேல் போல கிடைத்த விடுமுறை-போனஸ்

pongal bonus g.o: அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pongal 2019 Wishes in Tamil:பொங்கல் வாழ்த்துகள், Happy Pongal Greetings

Pongal 2019 Wishes in Tamil:பொங்கல் வாழ்த்துகள், Happy Pongal Greetings

Tamil Nadu Government Declared Holiday, Pongal Bonus: பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக ஜனவரி 14-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்துள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

ஏற்கனவே ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜனவரி 14 ஆம் தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஜனவரி 12 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து 6 நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது.

ஆனால் ஜனவரி 14 விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி இரண்டாவது சனிக்கிழமை, பணி நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் விடுமுறையை ஈடு செய்ய அடுத்த மாதம் வேலை பார்க்க சொன்னாலும் பண்டிகைக்கு பல்க்காக லீவ் கிடைத்திருப்பதை எண்ணி அரசு ஊழியர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் சொந்த ஊருக்கு ஒரு நாள் முன்பு செல்ல திட்டமிட்டிருக்கும் மக்கள், வெள்ளிக்கிழமை (11ம் தேதி) இரவே புறப்பட திட்டம் செய்து வருகின்றனர்.

Thai Pongal bonus 2019 for tamilnadu government employees: பொங்கல் போனஸ் அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணியாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை, போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, காலமுறை சம்பளம் பெறும் சி, டி பிரிவு அரசு பணியாளர்கள், உள்ளாட்சி மன்றம், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை தமிழக நிதி துறை செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Tamilnadu Pongal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment