பொங்கல் பண்டிகைக்கு, ரயிலில் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், இன்று (செப்டம்பர் 12ம் தேதி) முதல் முன்பதிவு செய்யலாம்.ரயிலில் பயணம் செய்ய, 120 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்யும் வசதி உள்ளதன் காரணமாக, முன்பதிவு இன்று துவங்கியுள்ளது.
Advertisment
பொங்கல் பண்டிகை, ஜன., 15ல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு, இன்றுடன் சேர்த்து, இன்னும், 125 நாட்கள் உள்ளன. வரும், 2020 ஜன., 11, 12, சனி, ஞாயிறு விடுமுறை. ஜன., 13, 14 என, திங்கள், செவ்வாய், இரண்டு நாட்கள் வேலை நாட்கள். அடுத்து, 15ம் தேதி புதன் அன்று பொங்கல்; 16ம் தேதி வியாழன் மாட்டு பொங்கல்; 17ம் தேதி, வெள்ளியன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.அடுத்து, சனி, ஞாயிறு என, இரண்டு நாட்களும் விடுமுறை நாட்கள். ஜன., 13, 14ல், இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்தால், ஒன்பது நாட்கள் விடுமுறையை அனுபவிக்கலாம்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு அதிகம் பேர் சொந்த ஊர் செல்வர் என்பதால், ரயில்களில் பயணியர் கூட்டம் அதிகம் இருக்கும்.ஜன., 10 வெள்ளிக்கிழமைக்கு ரயிலில் பயணிக்க, இவன்று முன்பதிவு துவங்கியது. ஜன., 11ல் பயணிக்க, வரும், 14ம் தேதி; ஜன., 14 போகியன்று பயணிக்க, வரும், 17ம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.இந்த தேதிகளில் முந்தினால், படுக்கை வசதியுடன் டிக்கெட் பெறலாம்.
பொங்கல் முடிந்து ஜனவரி 19ம் தேதி ஊருக்கு திரும்புவதற்கான டிக்கெட் முன்பதிவு வரும் செப்டம்பர் 21ம் தேதி தொடங்குகிறது.