Tamil News: தைப்பொங்கலையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, முதல் போட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று தொடங்கியது.
சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.
அதன்படி, ‘புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயபுரத்திலும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டிலும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சூரியூரிலும் ஜனவரி 15- ஆம் தேதி முதல் ஜனவரி 31- ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நாளை (14/01/2021) ஜல்லிக்கட்டு நடத்த ஏற்கனவே தமிழக அரசு அனுமதி அளித்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுான ராகுல் காந்தி, மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் இன்று (ஜனவரி 14) தமிழகம் வரவுள்ளார்.அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மதுரை ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க இன்று தமிழகம் வருகிறேன் என ராகுல்காந்தி ட்வீட்
ராகுல் காந்தியின் ஜல்லிக்கட்டு சிறப்பு நிகழ்ச்சியை லைவாக காண..
சென்னை பரங்கிமலை பகுதியில் காவல்துறை சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு
Live Blog
Pongal tamil Jallikattu : தை திருநாள் சிறப்பு நாளில் தமிழர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு லைவ் பிளாக் இதோ
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கலந்து கொள்கிறார். இதேபோல் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுகிறார்.
இதையொட்டி சுமார், 1,500 போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐஜி முருகன் மற்றும் மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் கடன் தள்ளுபடி திட்டத்தை பாரத் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளாக நிலுவiயில் உள்ள கடன் தொகையில் 20 சதவீதத்தை செலுத்தினால் மீதமுள்ள 80 சதவீதம் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதே சமயம் விவசாயிகளுக்கு புதிய விவசாய கடன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 29ம் தேதி தொடங்குகிறது. நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடக்க உரையாற்றுகிறார். நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசணம் நடைபெற்றது. மகரஜோதியை தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா! சுவாமியே சரணம் ஐயப்பா! என்று சரணம் கோஷமிட்டு வழிபாடு செய்தனர்.
தேசிய போலியோ சொட்டு மருந்து தினத்தை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவர் அலுவலகத்துடன் கலந்தாலோசித்து, 2021 ஜனவரி 31ம் தேதிக்கு மாற்றியுள்ளது. கோவிட் மேலாண்மை மற்றும் தடுப்பூசி சேவைகளும், கோவிட் அல்லாத அத்தியாவசிய சுகாதார சேவைகளும் ஒன்றுக்கொன்று பாதிப்பை ஏற்படுத்தாமல் இணைந்து செயல்படுவதை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் மூன்று நாட்களுக்கு அனுமதி இல்லை -பொதுப்பணித் துறை.
நம்ம ஊரு பொங்கல் விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்தடைந்தார் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை நேரில் காண, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று தமிழகம் வந்தார். மதுரை விமான நிலையத்தில் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 6 சுற்றுகள் முடிந்து 7வது சுற்று நடைபெற்று வருகிறது. தற்போதுவரை மாடுபிடி வீரர்கள் 38 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 7 பேர், பார்வையாளர் ஒருவர் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளனர்.
தைத்திருநாளை முன்னிட்டு மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி மரியாதை.
அமீர் நடிக்கும் ‘நாற்காலி’ திரைப்படத்தில் எஸ்.பி.பி குரலில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ பாடலை ஜன.16ம் தேதி முதல்வர் பழனிசாமி வெளியிடுகிறார்.
பொறியியல் மாணவர்களுக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு பிப்.1 முதல் 15 வரை நடைபெறும். ஒரு மணி நேரத் தேர்வாக ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு . தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்ட ஜல்லிக்கட்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட முதல்வருடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
மதுரை அவனியாபுரத்தில நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்த திமுக இளைஞர்அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இனி ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருவேன் என தெரிவித்துள்ளார்.
துரை தென்பலஞ்சி பகுதியில் நடைபெறும் பொங்கல் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்றார் . அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட பிறகு பொங்கல் கொண்டாட்டத்தில் ராகுல்காந்தி உற்சாகம். பொங்கல் விழாவில் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார் ராகுல்காந்தி.
தமிழக மக்களையும், தமிழ் பண்பாட்டையும் காக்கும் கடமை எனக்கு உள்ளது .தமிழக மக்களோடு நான் என்றும் நிற்பேன் -. ராகுல்காந்தி * தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேடையில் ராகுல்காந்தி பேச்சு.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மதுரை வந்தடைந்தார் அவனியாபுரத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியை திமுக இளைஞரணி தலைவர் ஸ்டாலினுடன் சேர்ந்து ரசித்து வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என இதுவரை 12 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிக சிறந்த பண்டிகை” “இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வை பெருக்கவும் நம்மை தூண்டட்டும்” “தைத்திருநாளில் நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை பெறுவோம்” என பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரம், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 788 காளைகளும், 430 மாடுபிடி வீரர்களும் தயார்நிலையில் உள்ளனர்