Advertisment

அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு திட்டம், பொங்கலுக்குள் புதிய ரேஷன் அட்டை- அமைச்சர் சக்கரபாணி பேட்டி

9 மாதங்களுக்குள் திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்த உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Minister Chakrapani

Minister Chakrapani

9 மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும், ’கருவிழி பதிவு திட்டம்’ செயல்படுத்த உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Advertisment

தற்போது ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கூலி வேலைக்கு செல்வோர், முதியவர்களின் விரல் ரேகை சரியாக பதிவு ஆகாததால், பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருக்கிறது.

இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை தமிழகம் முழுவதும் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.

இதன் முன்னோட்டமாக சென்னையில் கொண்டுவரப்பட்டு இருக்கிறது.

மேலும் மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை பரிந்துரை செய்கிறாரோ அந்த நபரின் பெயரை சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் பூர்த்தி செய்து கொடுத்தால் மாற்று நபர்கள் ரேஷன் பொருள் வாங்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில், மார்ச் மாதத்துக்குள் 30 சதவிகித ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வரும். 9 மாதங்களுக்குள் திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளிலும் செயல்படுத்த உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

புதிய குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொங்கலுக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது பொது விநியோக கடைகளில் பயோமெட்ரிக் முறை அவ்வப்போது செயல் இழப்பதால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகாரினையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று அமைச்சர் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment