Pongal Special bus details: 2023ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
சென்னையில் வசிக்கும் மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 12-ம் தேதியில் இருந்து 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், பொங்கல் பண்டிகை முடிந்தவுடன், ஜனவரி 18-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தினமும் செயல்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும் (மூன்று நாட்களுக்கு சேர்த்து), மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி வரை, வழக்கமாக இயக்கப்படும் பேரூந்துகளுடன், 10,632 பேருந்துகள் என மொத்தம் 16,932 சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது.
சென்னையில் தாம்பரம் மெப்ஸ் அண்ணா பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையம், கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி ஆகிய ஆறு இடங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகளின் இயக்கம் குறித்து ஏதேனும் தகவல் அறியவேண்டும் அல்லது புகாரளிக்க வேண்டும் என்றால், 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்த புகார்கள் தெரிவிக்க: 1800 425 6151, 044- 2474 9002, 044-2628 0445, 044-2628 1611 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களின் மூலம் அறிவிக்கலாம்.