பொங்கல் பண்டிகைக்கு 24 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்... எந்த தேதிகளில் இயங்கும்?

பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் சிறப்பு பேருந்துகளின் அறிவிப்பு தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பொங்கல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் பண்டியை ஒட்டி வெளியூர்களுக்கு செல்வோர் வசதிக்காக 11,12,13,14 நான்கு நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அவர் கூறினார். இதில் சென்னையில் இருந்து 14263 பேருந்துகள் இயக்கப்படும் என்ற அவர், மொத்தமாக 24708 பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.

சிறப்பு பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய 9 ஆம் தேதி அன்று சிறப்பு மையங்கள் திறக்கப்படும் என்றும், பண்டிகை முடிந்து திரும்பி வருவோருக்காக பேருந்துகள் இயக்குவது குறித்து ஜனவரி 2 ஆம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த பேருந்துகள் மாதவரம், தாம்பரம் மெப்ஸ், கே.கே நகர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும், கோயம்பேட்டில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

IRCTC : சொந்த ஊருக்கு செல்ல பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close