Advertisment

சென்னையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் அறிவிப்பு; SETC பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இயக்கப்படும்!

சென்னையில் எந்தெந்த இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் SETC பேருந்துகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Pongal Special Bus Reservation - பொங்கல் சிறப்புப் பேருந்து முன்பதிவு தொடக்கம்! டிக்கெட் எங்கே சென்று எடுக்க வேண்டும்? முழு விவரம்

சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்படும் இடங்கள் அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் எந்தெந்த இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் புறப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் SETC பேருந்துகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

முன்பதிவு செய்யப்பட்ட அரசு விரைவு போக்குவரத்து கழக (SETC) பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது. 

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து செல்லும் TNSTC பேருந்துகள்; கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் SETC பேருந்துகள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட விரைவு போக்குவரத்து கழக (SETC) பேருந்துகள் மட்டுமே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது. 

மேலும், திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகம், நாளை (12.01.2024) முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  ஜனவரி 12,13,14 ஆகிய தேதிகளில் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து 4,706 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 11,006 பேருந்துகளும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்காக 8,478 பேருந்துகள் என மொத்தமாக 19,484 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களுக்கு 94450 14450, 94450 14436 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக, முன்பதிவு செய்த பேருந்து சென்னையில் எந்த இடத்தில் இருந்து புறப்படும் என்று தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக பொங்கல் சிறப்பு பேருந்துகள் எந்த இடங்களில் இருந்து புறப்படும் என்ற விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும் SETC பேருந்துகள் விவரம்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு NH 45 வழியே செல்லும் SETC பேருந்துகள் புறப்படும் இட விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கும்பகோணம் மார்க்கமாக (NH-45) இயக்கப்படும் SETC பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற இடங்களுக்கு பேருந்துகள் தாம்பரம் மெப்ஸில் இருந்தும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பேருந்துகளை முன்பதிவு செய்தவர்களுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து SETC பேருந்துகள் புறப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஜனவரி 12 – 14 வரை முன்பதிவு செய்தவர்களுக்கான விரைவு போக்குவரத்து கழக (SETC) பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து செல்லும் TNSTC பேருந்துகள்:

SETC அல்லாத பிற அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் அல்லது முன்பதிவு செய்யாதவர்கள் கோயம்பேடு செல்ல வேண்டும். விழுப்புரம், திருச்சி, மதுரை போக்குவரத்து கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும். கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, நெல்லை போக்குவரத்து கழக பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்படும். ஈசிஆர் வழியாக நாகை, கும்பகோணம், திருத்துறைப்பூண்டி செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pongal Special Buses
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment