பொங்கல் சிறப்பு ரயில் கட்டணம், விமானக் கட்டணத்தை விட அதிகமாம்!
சிறப்பு சுவிதா ரயில்களின் கட்டணம் ஆம்னிபஸ்கள் கட்டணத்தை (ஏன்..... விமானக் கட்டனன்த்தை) விட அதிகமாக உள்ளது என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிறப்பு சுவிதா ரயில்களின் கட்டணம் ஆம்னிபஸ்கள் கட்டணத்தை (ஏன்..... விமானக் கட்டனன்த்தை) விட அதிகமாக உள்ளது என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
pongal leave news,pongal, pongal 2020,Suvidha trains fare
பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு ரயில்களில் பிளக்சி கட்டண முறையில் டிக்கெட் நிர்ணயம் செய்யப்படுகிறது.
Advertisment
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
அதாவது,
Advertisment
Advertisements
20 சதவீத டிக்கெட்டுகள் விற்பனையான பின்பு, ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும்.
தாம்பரம் – திருநெல்வேலி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, தாம்பரம்- நாகர்கோவில் போன்ற பல்வேறு சிறப்பு சுவிதா ரயில்களை இந்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்காக தென்னக ரயில்வே அறிவித்திருந்தது.
ஆனால், இந்த சுவிதா ரயில்களின் கட்டணம் ஆம்னிபஸ்கள் கட்டணத்தை (ஏன்..... விமானக் கட்டணத்தை) விட அதிகமாக உள்ளது என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உதாரணமாக, சென்னை- திருநெல்வேலி ஆம்னிபஸ்களில் பொங்கல் விடுமுறையின் போது சென்னை - திருநெல்வேலிக்கு ரூ.1000 முதல் 2000 வரை வசூலிக்கப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை, சுவிதா ரயில் சென்னை- திருநெல்வேலி 3-ம் வகுப்பு ஏசி டிக்கெட்டின் விலை ரூ .3,850 ஆகும். 3-ம் வகுப்பு விமானக் கட்டணம் கூட இவ்வளவு கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
சுவிதா ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட் கட்டணம் ரூ.1,445 ஆகும். இதே கட்டணம் மற்ற நேரங்களில் ரூ.385 என்பதாய் உள்ளது . அதாவது, நான்கு மடங்கு கட்டணங்கள் அதிகமாக உள்ளது.
சுவிதா சிறப்பு ரயில்களின் கட்டணங்கள் அதிகமாக இருந்தாலும்,வேறு வழியின்றி கூடுதல் கட்டணத்தை டிக்கெட்டை வாங்கி செல்வதாக தெரிவிக்கன்றனர்.
ரயில்வே வருவாயை அதிகரிக்க அறிமுகப்படுத்தியசுவிதா ரயில்கள்.....அதே வகையான தடத்தில்,நேரத்தில் தான் பயணிக்கிறது. இந்த கூடுதல் கட்டணம் எந்த வகையில் நியாயம்? என்ற கேள்வியையும் முன்வைக்கின்றனர்.