பண்டிகை காலங்களில் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊரிற்கு சென்று கொண்டாடுவது வழக்கமான விஷயம் ஆகும்.
2023ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அணைத்து ரயில் சேவைகளும் நிரம்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பதிவு தொடங்கிய அன்றே அணைத்து பயணசீட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக கூறுகின்றனர்.
இதனால், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்சேவை குறித்த தகவலுக்காக மக்கள் காத்திருக்கித்தனர்.
இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வரை, கொச்சுவேலியில் இருந்து தாம்பரம் வரை, எர்ணாகுளத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை என பத்து சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில்காண சேவை இன்று காலை 8 மணியளவில் இருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சிறப்பு ரயில் சேவைக்கு முன்பதிவு செய்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பலர் காத்திருந்தனர். அதிகாலையில் இருந்து காலை 8 மணிக்கு துவங்கும் முன்பதிவுக்காக கவுண்டர் திறக்கும் வரை காத்திருந்தனர்.
ஆனால், காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களிலேயே சிறப்பு ரயில் சேவைகளுக்கான அணைத்து டிக்கெட்டுகளை விற்றுத்தீர்ந்தது.
பெரும்பாலானோர் ஆன்லைனிலேயே சிறப்பு ரயிலுக்காக டிக்கெட்டுகளை எடுத்து விட்டதால் கவுண்டரில் காத்திருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், சொந்தஊரிற்கு செல்ல ஆர்வமாக இருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil