New Update
/indian-express-tamil/media/media_files/1SAMRVsG7aOwW64AaPLC.jpg)
திங்கள் மற்றும் புதன் அன்று தூத்துக்குடியில் இருந்து இந்த ரயில் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது
00:00
/ 00:00
திங்கள் மற்றும் புதன் அன்று தூத்துக்குடியில் இருந்து இந்த ரயில் தாம்பரம் வரை இயக்கப்பட உள்ளது
Pongal Festival | Southern Railway: பொங்கல் பண்டிகை ஒட்டி பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் முக்கிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. அவ்வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இந்நிலையில், தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலும், தாம்பரம் - நெல்லை - தாம்பரம் இடையே முன்பதிவு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் டூ தூத்துக்குடி
வண்டி எண் 06001/06002 ஆகிய ரயில்கள் தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும். இந்த ரயிலில் 24 பெட்டிகள் இருக்கும். முன்பதிவில்லாத ரயில்களாக இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களானது வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை (14ம் தேதி முதல் 17-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையும், தூத்துக்குடியில் இருந்து திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை இந்த சிறப்பு ரயில்களானது இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயிலானது செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர் போர்ட், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் வழியாக தூத்துக்குடிக்கு அன்று இரவு 10 மணி 45 நிமிடங்களுக்கு வந்து சேரும். இந்த 2 நாட்களும் இதே நேரத்தில் ரயில் இயக்கப்படும்
இதேபோல் மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு இதே வழியாக 8 மணி 30 நிமிடங்களுக்கு தாம்பரம் வந்தடையும்.
தாம்பரம் டூ நெல்லை
வண்டி எண் 06003/06004 ஆகிய ரயில்கள் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் முன்பதிவு ரயில்களாக இயக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து இரவு 9:50 மணிக்கு புறப்படும் ரயிலானது, 11, 13 மற்றும் 16ம் தேதிகளில் (வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை) காலை 11.15 மணிக்கு வந்து சேரும்.
தாம்பரத்தில் இருந்து இரவு 9:50 மணிக்கு புறப்படும் ரயிலானது, செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கிழக்காடயம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மஹாதேவி, திருநெல்வேலிக்கு காலை 11.15 மணிக்கு வந்து சேரும். இந்த 3 நாட்களும் இதே நேரத்தில் ரயில் இயக்கப்படும்
இதேபோல், மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து மதியம் 2:15 மணிக்கு புறப்படும் ரயிலானது, 12,14 மற்றும் 17ம் (வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, புதன்கிழமை) இதே வழித்தடங்களில் பயணித்து சென்னை தாம்பரத்திற்கு மாலை 3:15 மணிக்கு வந்துசேரும்.
#JUSTIN | பொங்கல் விடுமுறையை ஒட்டி தாம்பரம் - தூத்துக்குடி - தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலும்,
— Sun News (@sunnewstamil) January 10, 2024
தாம்பரம் - நெல்லை - தாம்பரம் இடையே முன்பதிவு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது#SunNews | #PongalSpecialTrain | #Railway pic.twitter.com/1VAJYyfSfw
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.