தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அமலாக்க இயக்குனரகத்தின் (ED) ரேடாரின் கீழ் தி.மு.க.,வின் மற்றொரு உயர் அமைச்சர் சிக்கியுள்ளார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கவுதம சிகாமணி ஆகியோர் கடந்த 2011-ம் ஆண்டு சட்டவிரோதமாக மணல் அள்ளியதாகக் கூறப்படும் பண மோசடி வழக்கு தொடர்பாக திங்கள்கிழமை அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டனர்.
2006 முதல் 2011 வரை சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது தமிழ்நாடு சிறு கனிம சலுகைகள் சட்டத்தை மீறியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும் வானூர் தொகுதிக்கு உட்பட்ட பூத்துறையில் சட்டவிரோதமாக ரூ.28.37 கோடி மதிப்பிலான செம்மண் குவாரியை பொன்முடி ஒதுக்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படியுங்கள்: கட்சிகளுக்குள் சாதி: தி.மு.க குடும்பத்தின் ஆதரவுடன்… வாழ்க்கையைப் பிரதிபலித்த சினிமா
ஒரு தி.மு.க தலைவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம், இந்த வழக்கு "கட்சியின் இமேஜைக் கெடுக்காது" என்று கூறினார், மாறாக "கட்சித் தலைவர்கள் அமலாக்கத்துறையால் துன்புறுத்தப்பட்டு குறிவைக்கப்படுவது பற்றிய அவர்களின் கதையை வலுப்படுத்துகிறது", என்றும் அந்த தலைவர் கூறினார்.
கல்வி நிறுவனங்களின் சங்கிலி
மூன்று தசாப்தங்களாக தி.மு.க.வுடன் தொடர்புடைய, 72 வயதான பொன்முடி, தற்போது கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்முடி முனைவர் பட்டம் பெற்று சிறிது காலம் பேராசிரியராகவும் பணியாற்றிவர். இதையடுத்து அவர் தி.மு.க பக்கம் இழுக்கப்பட்டார். 1989-ம் ஆண்டு விழுப்புரம் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.,வானார்.
பொன்முடி ஆறு முறை எம்.எல்.ஏ.வாக உள்ளார், தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோயிலூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், விழுப்புரம்- கள்ளக்குறிச்சி பெல்ட்டில் கணிசமான செல்வாக்கைக் கொண்டு வருகிறார். சிறுபான்மையினரின் வாக்குகளை தி.மு.க.வுக்கு கொண்டு வந்த முக்கிய நபராகவும் கருதப்படுகிறார்.
பொன்முடியின் குடும்பம் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை "சூர்யா குழும கல்வி நிறுவனங்கள்" என்ற பதாகையின் கீழ் நடத்துகிறது. கவுதம சிகாமணி முதல் முறையாக எம்.பி.யாக கள்ளக்குறிச்சி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் நிலையில், அமைச்சரின் மற்றொரு மகனும் மருத்துவருமான பி.அசோக் சிகாமணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
சர்ச்சைக்குரிய நபர்
கடந்த 2016ம் ஆண்டு மற்றும் கடந்த மாதம் என இரண்டு முறை வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்குகளில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
செந்தில் பாலாஜிக்கு பதவி நீக்கம் கடிதம் அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை கவர்னர் அலுவலகத்தின் எல்லையில் கேள்விகளை எழுப்பியது. ஜனவரியில், ஆளுனரின் பேச்சுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த ஆளுனர் ரவியிடம் மரியாதைக் குறைவாக, பொன்முடி கை சைகை செய்தார்.
மே 2022 இல் "சிறந்த வேலை வாய்ப்புகளுக்காக" இளைஞர்கள் இந்தி கற்க வேண்டும் என்ற ஆளுனர் ரவியின் கூற்றுக்கு பதிலளித்த பொன்முடி, தமிழ்நாடு ஆங்கிலம் மற்றும் தமிழை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறது என்று கூறினார்.
“இந்தி கற்றுக்கொண்டால் வேலை கிடைக்கும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். கிடைத்ததா? நம் மாநிலத்தில், கோயம்புத்தூரில் போய்ப் பாருங்கள்... பானி பூரிகளை விற்பவர்கள் அனைவரும் (இந்தி பேசுபவர்கள்),” என்று பொன்முடி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.