விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்ததால் 14 பேர்கள் மரணம் அடைந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. விஷச் சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மேலும், விஷச் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் அறிவித்தார்.
விஷச் சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரண அறிவித்ததை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 'ஜெயலலிதா, ஓ.பி.எஸ் ஆட்சியிலும் சாராய சாவுகளுக்கு இழப்பீடு தொகை வழங்கினர் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் கள்ளச் சாராய மரணங்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"