அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் ஓய்வு பெற்ற கனிமவளத்துறை துணை இயக்குனர் சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2006-11 தி.மு.க ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர்கள் செம்மண் குவாரிகளில் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.37 லட்சத்திற்கும் மேலான அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிடோர் மீது விழுப்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படியுங்கள்: விஜயலட்சுமி விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம்; சீமான் புகார்
இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். தன்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்ளிட்ட இதுவரை 6 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணையை வரும் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“