VCK Protest at Valluvar Kottam: கடந்த 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்த போது பொன்பரப்பியில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடந்தது.
இதில் தி.மு.க-வின் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார், சிபிஐஎம் கட்சியைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன், சிபிஐ-யின் முத்தரசன், ஆசிரியர் கி.வீரமணி, சுப.வீரப்பாண்டியன், கரு.பழனியப்பன், எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இவர்கள் அனைவரும் பா.ம.க-வின் சாதி வெறிச் செயலை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
Ponparappi Issue: VCK Protest against PMK
ஜனநாயகத்தை படுகொலை செய்த பா.ம.க அதை மூடி மறைக்கப் பார்க்கிறது. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் நிச்சயம் வெற்றி பெறுவார் என கலந்துக் கொண்டவர்கள் பேசினர்.
பின்னர் இந்த போராட்டத்தைப் பற்றி தி.மு.க தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரிலும் ட்வீட் செய்திருந்தது.