Advertisment

கடலில் மூழ்கிய பூம்புகாரின் டிஜிட்டல் வடிவம்; விஞ்ஞானிகள் சூப்பர் முயற்சி!

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றில் கடலில் மூழ்கிப்போன தமிழ்நாட்டின் சோழர்களின் துறைமுக நகரம் பூம்புகார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைமையிலான கூட்டமைப்பு டிஜிட்டல் முறையில் புனரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
poompuhar, cholas port city poompuhar, port city poompuhar, tamil nadu, பூம்புகார், பூம்புகார் டிஜிட்டல் வடிவம், கடலில் மூழ்கிய பூம்புகார், tamil nadu port city digital recreating, பூம்புகாரை மீண்டும் டிஜிட்டலில் உருவாக்க திட்டம், poompuhar tamil nadu port, tamil nadu port city chola dynasty, sea swallowd poompuhar, Tamil indian express news

poompuhar, cholas port city poompuhar, port city poompuhar, tamil nadu, பூம்புகார், பூம்புகார் டிஜிட்டல் வடிவம், கடலில் மூழ்கிய பூம்புகார், tamil nadu port city digital recreating, பூம்புகாரை மீண்டும் டிஜிட்டலில் உருவாக்க திட்டம், poompuhar tamil nadu port, tamil nadu port city chola dynasty, sea swallowd poompuhar, Tamil indian express news

சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றில் கடலில் மூழ்கிப்போன தமிழ்நாட்டின் சோழர்களின் துறைமுக நகரம் பூம்புகார் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைமையிலான கூட்டமைப்பு டிஜிட்டல் முறையில் புனரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தனர்.

Advertisment

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த நகரம் சங்க இலக்கியப் படைப்புகளில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன. தென் தமிழ்நாட்டில் தற்போதுள்ள பூம்புகார் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் கடல்கோல் மற்றும் கடல்மட்டத்தின் உயர்வால் கடலுக்குள் மூழ்கியது என்று என்று கூறினர்.

ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அதிகாரி கூறுகையில், “இருப்பினும், தமிழ் இலக்கியம், தொல்பொருள், வரலாறு, கல்வெட்டு, நீருக்கடியில் நடத்தப்பட்ட ஆய்வு, புவி அறிவியல், பூம்புகார் நகர் ஆரம்ப காலத்தில் நிறுவப்பட்ட சரியான இடத்தைப் பற்றிய மர்மம், அதனுடைய காலம், பின்னர் நடந்த மாற்றங்கள்,   காவிரி நதியின் முகப்பில் தற்போதைய இடத்தில் காலத்தில் இடத்தின் பரிணாமம், அது அழிந்த காலம் அதற்கான காரணங்கள் என பல ஆய்வுகள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளன.” என்று கூறினார்.

“இந்த ஆய்வு, நீருக்கடியில் சர்வே செய்தல், புகைப்படம் எடுத்தல், நீண்ட தூரம் இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் கடலுக்கு அடியில் துளையிடுதல், காலத்தில் தொடர்ச்சியான பரிணாமம் மற்றும் அதன் அழிவு பற்றிய விரிவான தகவல்களை வெளிக்கொண்டுவர தொலைநிலை உணர்திறன் அடிப்படையிலான புவி இயற்பியல் ஆய்வுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. கடந்த 20,000 ஆண்டுகளில் நிலச்சரிவு, கடல் மட்ட உயர்வு, காவேரியின் இடப்பெயர்வு, வெள்ளம், சுனாமி, சூறாவளி, கடல் அரிப்பு போன்ற புவி இயக்கவியல் செயல்முறைகளைக் காட்சிப்படுத்தலும் இதில் அடங்கும். ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் பூம்புகாரின் வாழ்க்கை வரலாற்றை டிஜிட்டல் முறையில் புனரமைக்க உதவும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

publive-image

குஜராத்தின் துவாரகா நகரத்திலும் இதேபோன்ற திட்டம் தொடங்கப்பட்டு வருவதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஐசிபிஎஸ் பிரிவின் தலைவர் டாக்டர் கே ஆர் முரளி மோகன் தெரிவித்தார். “துவாரகாவை வரைபடமாக்க ஏற்கனவே நன்றாக நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், பூம்புகாரில் அதிகம் செய்யப்படவில்லை. இந்த இரண்டு தளங்களைப் பார்த்தால், அவை குறுக்காக எதிர் திசையில் இருக்கும். வங்காள விரிகுடாவில் புவி இயக்கவியலில் என்ன நடந்தது, இதேபோன்ற விஷயங்கள் மறுபுறத்திலும் நடந்ததா, புவியியல் ரீதியாக இந்த இரண்டு தளங்களும் இணைக்கப்படலாம், எங்களுக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.

பூம்புகாரின் புனரமைப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இந்திய டிஜிட்டல் பாரம்பரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதன் முதல் திட்டமான ‘டிஜிட்டல் ஹம்பி’ கண்காட்சி தற்போது இங்குள்ள தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பழமையான ஆவணங்களை ஆராய்ந்து நம்முடைய நினைவுச் சின்னங்களை டிஜிட்டல் முறையில் மெய்நிகர் இடங்களாக மாற்றுவதற்கு பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களுடன் செயல்படுகிறது” என்று மோகன் கூறினார்.

ஹம்பி திட்டம் இப்பகுதியில் உறுதியான மற்றும் உறுதியற்ற பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கிறது. பார்வையாளர்களுக்கு சந்தைகள் எவ்வாறு தோற்றமளிக்கின்றன மற்றும் எப்படி இசை தூண்கள் கட்டப்பட்டன என்பதை அதிகப்பட்சமாக பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.

“எங்களுடைய இரண்டாம் கட்டத்தில், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் தற்போது நீருக்கடியில் இருக்கும் பாரம்பரியத்தை நாங்கள் தேடுகிறோம். அவை எவ்வாறு கட்டப்பட்டன, கட்டமைப்புகளின் புகைப்படங்கள் கிடைக்கின்றனவா மற்றும் நகரம் நீரில் மூழ்குவதற்கு காரணங்கள், அதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது ஆகியவற்றில் இப்போது கவனம் செலுத்தப்படுகிறது” என்று மோகன் கூறினார்.

பூம்புகார் திட்டத்திற்காக, பண்டைய நகரத்தின் வரலாற்றைக் கண்டறிய 13 கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் வலையமைப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைத்துள்ளது. அதில், ஸ்கூல் ஆஃப் மரைன் சயின்சஸ், அழகப்பா பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள கடல் கல்வி மற்றும் பயிற்சி பல்கலைக்கழகம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்டவை அடங்கும்.

publive-image

இந்த துறைமுக நகரம் கண்டங்களுக்கு இடையிலான வர்த்தகத்தில் செழித்திருந்தது என்றாலும் அது அழிந்துவிட்டது.” என்று டிஜிட்டல் பூம்புகார் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.எம்.ராமசாமி தெரிவித்தார்.

மேலும், “எங்களுடைய முதல் படி, அது எப்போது, ​​எங்கு நிறுவப்பட்டது, அது எங்கு மாற்றப்பட்டது, அதன் தற்போதைய இருப்பிடம், அது மாற்றப்பட்ட கால கட்டங்கள், அதன் காலம் என்ன ஆகியவற்றை ஆய்வு செய்வதாகும்.” என்று கூறினார்.

இந்திய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வுகள், இந்த நகரம் ஆரம்பத்தில் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள காவிரி டெல்டா-ஏ-யில் ஆரம்பத்தில் நிறுவப்பட்டதாகக் காட்டுகின்றன.

இந்திய ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வுகள், இந்த நகரம் ஆரம்பத்தில் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள காவிரி டெல்டா-ஏ-யில் ஆரம்பத்தில் நிறுவப்பட்டதாகக் காட்டுகின்றன.

“இது 11,000 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கில் இருந்து 10 கி.மீ தொலைவில் டெல்டா - பி-க்கு மாற்றப்பட்டது. 8000 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் 10 கிமீ மேற்கே டெல்டா - சி-க்கு மாற்றப்பட்டது. இறுதியாக, இது சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றின் முகத்துவாரத்தில் மீண்டும் நிறுவப்பட்டது. தொடர்ச்சியான கடல் மட்ட உயர்வு மற்றும் டெல்டாக்கள் நீரில் மூழ்கியதால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன” என்று ஒரு அதிகாரி கூறினார்.

மேலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் ஒரு துறைமுகம் போன்ற அமைப்பு மற்றும் கடல் சுவர்கள் மற்றும் ஒரு பாலம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தன. இவை பூம்புகாரின் வரலாறு மற்றும் நாட்டின் இந்த பகுதியின் சமூக, கலாச்சார மற்றும் தொழில்நுட்ப பரிணாமம் மற்றும் பூம்புகாரின் காலம் 3000 ஆண்டுகள் முதல் 15,000 - 20,000 ஆண்டுகள் வரை என புதிய நுண்ணறிவுகளை வழங்கியுள்ளன. இந்த ஆய்வுகள் பூம்புகாரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சமூக-கலாச்சார பரிணாமம் மட்டுமல்லாமல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிணாமம் மற்றும் இந்த பிராந்தியத்தின் பேரழிவு வரலாறு பற்றிய அறிவியல் தகவல்களின் தொகுப்புகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அந்த அதிகாரி கூறினார்.

Tamilnadu Research History
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment