சேலம் மேட்டூரைச் சேர்ந்த சௌமியா என்ற பொறியியல் பட்டதாரி பெண் ஏழ்மையான சூழ்நிலையில் இருந்தாலும், முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேலை கேட்டு அளித்த மனுவுடன் கொரோனா நிதியாக 2 பவுன் நகையை கழற்றி கொடுத்துள்ளார். இதனால், நெகிழ்ந்து போன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பெண்ணுக்கு விரைவில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது, சௌமியா இந்த மனுவை அளித்துள்ளார். இந்த மனுவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.
பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.
பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று உறுதியளித்துள்ளார்.
வறுமையில் இருந்தாலும் வேலை கேட்டு அளித்த மனுவுடன் 2 பவுன் நகையை அளித்த அந்த சௌமியாவின் முகவரி வெளியிடப்படவில்லை என்றாலும் அவர் அந்த மனுவில் என்ன எழுதியுள்ளார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
“என்னிடம் பணம் இல்லாததால் கொரோன நிதித் தொகையாக எனது கழுத்திலிருந்த 2 பவுன் செயினை நிதியாக கொடுக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டு அந்த மனு தொடங்குகிறது.
அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது: “இரா.சௌமியா ஆகிய நான் பி.இ கம்ப்யூட்டர் சைன்ஸ் பட்டதாரி, எனது தந்தை ஆவின் ஓய்வுபெற்ற பணியாளர். என்னுடன் பிறந்த மூத்த சகோதரிகல் 2 பேர் அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. எனது தந்தை பணியில் இருந்து பெற்ற சம்பளத் தொகை அனைத்தையும் எங்களை படிக்க வைக்கவும் சகோதரிகள்க்கு திருமணம் செய்யவும் செலவும் செய்துவிட்டார். நாங்கள் 3 பெண்கலூம் பட்டதாரிகள். ஆனால், வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது தந்தை பணி ஓய்வு பெற்று வந்த சில மாதங்களில் என் அம்மாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு நுரையீரல் பழுதடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 12.03.2020 அன்று இறந்துவிட்டார்கள். எனது தந்தை ஓய்வு பெற்ற சேமிப்பு தொகை அனைத்தையும் அம்மாவின் மருத்துவத்திற்காக செலவு செய்துவிட்டார். அம்மாவை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவ செலவு (சுமார் 13 லட்சம்) ஆகிவிட்டது. எங்களுக்கு சொந்தவீடு கிடயாது. ஆகியால், அம்மா இறந்த பிறகு, மேட்டூரில் குடியிருந்த நாங்கள் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு தற்போது எனது தந்தை பிறந்த கிராமத்திற்கு வந்து வாடகை வீட்டில் தங்கி உள்ளோம். என்க்கள் ஆதன் விலாசம் எல்லாமே (30ஏ காவேரி நகர், மேட்டூர் என்றுதான் உள்ளது) எனது தந்தைக்கு பணி ஓய்வு தொகையாக ரூ.7,000 மட்டும் கிடைக்கிறது. வீட்டு வாடகை ரூ.3,000 போக ரூ.4,000 வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம். திருமணமாகிய எனது சகோதரிகள் எங்களுக்கு உதவிசெய்கின்ற வசதிவாய்ப்பு அவர்களுக்கு இல்லை. ஆகையால், மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறோம். எனக்கு அம்மாவாக இருந்து வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் நன்றியுடன் இருப்பேன். எனக்கு அரசினர் வேலை வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எனது ஊரின் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்தால்கூட போதும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். “இந்த வேலைவாய்ப்பை எனது தாய் மீண்டும் உயிர்பெற்று வந்ததாக தாய் அன்புடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்” நன்றியுடன் இரா.சௌமியா.” என்று குறிப்பிடுள்ளார்.
சௌமியாவின் இந்த கடிதத்தைப் படித்து மிகவும் நெகிழ்ந்துபோன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து ஃபேஸ்புக்கில் தெரிவிக்கையில், “மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது.
பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது.
பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று உறுதியளித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார் என்றால் அது அரசு வேலைதான் என்று சமூக ஊடகங்களில் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.