துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு நோக்கி இன்று (அக்.12) காலை சென்று கொண்டிருந்த 'ஃபிளை துபாய்' நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
கோழிக்கோடு விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவிய காரணத்தால் அரை மணி நேரத்துக்கு மேல் வானில் வட்டமிட்ட அந்த விமானம் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/xpuvmNi4pg3BrPCguNFZ.jpg)
இதையடுத்து இன்று காலை 7. 45 மணியளவில் கோவையில் விமானம் தரையிறங்கியது. வானிலை சீரான தகவல் கிடைத்தபின் மீண்டும் விமானம் கோழிக்கோடு புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“