New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/27/15HSdvIjmnvg5iTRYZ9s.jpg)
இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 900-க்கும் மேற்பட்ட பங்குனி ஆமைகள் உயிரிழந்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து கண்காணிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சென்னையை ஒட்டிய கிழக்குக் கடற்கரையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பங்குனி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன. இத்துயரத்தைக் காண நேரில் சென்றிருந்தோம். அக்கரை கடற்கரையை ஒட்டிய 2 கி.மீ. நீளத்தில் மட்டும் 18 ஆமைகள் இறந்திருந்தன.
இந்த ஜனவரி தொடங்கி மொத்த கடற்கரையிலும் 900க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. ஆமைகளை உடற்கூராய்வுக்கு உட்படுத்தியதில் மீன்பிடிக்கப் பயன்படுத்தும் வலைகளில் மாட்டி மூச்சுவிட முடியாமலே பெரும்பாலான ஆமைகள் உயிரிழந்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த 2 மாத காலம் பங்குனி ஆமைகள் அதிகளவில் முட்டையிட வரக்கூடும் என்பதால் தமிழ்நாடு மீன்வளத்துறை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோருகிறோம். @CMOTamilnadu @ARROffice
— Poovulagin Nanbargal / பூவுலகின் நண்பர்கள் (@poovulagu) January 27, 2025
அனுமதிக்கப்படாத கடற்பகுதிகளில் பயன்படுத்தக் கூடாத வலைகளை உபயோகித்த மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.
அடுத்த 2 மாத காலம் பங்குனி ஆமைகள் அதிகளவில் முட்டையிட வரக்கூடும் என்பதால் தமிழ்நாடு மீன்வளத்துறை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.