சென்னையில் இன்று அதிகாலை கார் விபத்து ஏற்படுத்திய நடிகர் விகரம் மகன் துரூவ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு. 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
Advertisment
நடிகர் விக்ரம் மகன் துரூவ் ஏற்படுத்திய கார் விபத்து:
நடிகர் விக்ரம் மகன் துருவ், இன்று அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் கார் விபத்து ஏற்படுத்தினார். அதிவேகமாக ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற ஆட்டோ ஒன்றின் மீது மோதியது. அந்த நேரம் போஸ்டர் ஒட்டும் பணியை முடித்துவிட்டு, தமது ஆட்டோவில் அமர்ந்திருந்த ஓட்டுநர் காமேஷ் படுகாயமடைந்தார்.
நடிகர் மகன் ஓட்டி வந்த கார் ஆட்டோ மீது மோதியது
Advertisment
Advertisements
ஆட்டோ மீது மோதிய கார் அந்த இடத்தொ நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. விபத்து ஏற்படுத்திய அதே வேகத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வீட்டருகே உள்ள பிளாட்பார்மில் மோதியது. பின்னர் பள்ளத்தில் சிக்கிய கார் நகர்த்த முடியாமல் நின்றது. துரூவ் பயணித்த காரில் இவருடன் 3 பேர் இருந்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த உடனே அனைவரும் காரை விட்டு இறங்கி ஓடினர். அதில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினர் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது, காரை ஓட்டி வந்தது நடிகர் விக்ரம் மகன் துரூவ் என்று தெரிய வந்தது. பின்னர் இந்த வழக்கு அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றினர்.
நடிகர் விக்ரம் மகன் துரூவ் ஓட்டி வந்த கார்
இதையடுத்து, துருவ் மீது அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல், விபத்து மூலம் கொடிய காயம் ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ், அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். துருவ் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கார் விபத்தில் படுகாயமடைந்த காமேஷ்
இதனிடையே ஆட்டோ ஓட்டுநர் காமேஷின் தலை, கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டதால் அவர் ஆம்புலன்ஸ் மூலம், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.