/tamil-ie/media/media_files/uploads/2022/04/TTF-Vasan.jpg)
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார்.
Road accident in Kanchipuram : பைக் சாகசங்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்பவர் டிடிஎஃப் வாசன். இவர் மீது வேகமாக வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/ttf-vasan-age.jpg)
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி சத்திரம் என்ற இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளார். இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணித்த நிலையில் அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பில் மோதியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இது அவரது கை எலும்பு உடைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த டிடிஎஃப் வாசனுக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/TTF-Vasan.jpg)
பைக் சாகசங்கள் மூலம் அறியப்படும் டிடிஎஃப் வாசன், அண்மையில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். இந்த நிலையில், சாகசம் செய்ய முயன்று விபத்தில் சிக்கியுள்ளார்.
டிடிஎஃப் வாசன் அதிவேகமாக பைக்கை இயக்கி, போலீசாரிடம் பலமுறை சிக்கியுள்ளார். அண்மையில் இவர் கோயம்புத்தூரில் இருந்து லடாக்கிற்கு பைக்கில் அதிவேகமாக சென்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us