scorecardresearch

வெளிநாட்டில் வசிக்கும் தமிழரா? உங்களுக்கான தமிழக அரசின் அறிவிப்பு

Tamil Nadu News: 2015ஆம் ஆண்டில் 28 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்துகொண்டு இருந்தனர், தற்போது அந்த எண்ணிக்கை 2-3 கோடியாக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் தமிழரா? உங்களுக்கான தமிழக அரசின் அறிவிப்பு

Tamil Nadu News: 2015ஆம் ஆண்டில் 28 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்துகொண்டு இருந்தனர், தற்போது அந்த எண்ணிக்கை  2-3 கோடியாக உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் 28 லட்சத்தில் இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 2-3 கோடியாக உயர்ந்துள்ளதால், அவர்களின் நலனை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் இதைப்பற்றின தகவல்களை குடியுரிமை இல்லாத தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மத்திய கிழக்கிற்கு புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கான நியாயமான ஆட்சேர்ப்பு செயல்முறை மற்றும் புறப்படுவதற்கு முந்தைய நடைமுறைகள் குறித்த மாநில அளவிலான ஆலோசனை கூட்டத்தில் ஜெசிந்தா லாசரஸ் கூறினார். 

மேலும், வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் சிறப்பு மையத்தை தொடங்கியுள்ளது என்றும், பொதுமக்கள் இந்த சேவைகளைப் பெறலாம் என்றும் கூறினார்.

“வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை, இதனால் நெருக்கடியான காலங்களில் அவர்களுக்கு உதவுவது கடினமாக உள்ளது.

ஆகையால், வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடு நல வாரியத்தில் தங்கள் முகவரியை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இளைஞர்கள் விண்ணப்பிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். 

வேலை வாய்ப்பு என, சமூக வலைதளங்களில் பல போலியான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் உலா வருகின்றன. மேலும், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்புபவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் சிறப்பு திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்,” என்று லாசரஸ் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Population of tamil people working abroad has been increased to crores