Weather forecast today live updates : தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று ( மே 21ம் தேதி) இரவு 10 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...
தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பலபகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி மின்னலுடன் கூடிய சூழல் நிலவும்.
கனமழை எச்சரிக்கை : 24ம் தேதி, தமிழகத்தின் உட்புற மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
Weather forecast today - weather in chennai : சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : தமிழகம் மற்றும் புதுச்சேரி கடேலாரப்பகுதிகளின் தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் பலத்த காற்று ( மணிக்கு 40 முதங் 50 கி,மீ வேகத்தில் ) வீச வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மழைப்பதிவு ( 22ம் தேதி காலை 8.30 மணிநிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி,மீ)
கன்னியாகுமரி - 6.80 மி,மீ
நீலகிரி - 20.50 மி,மீ
தேனி -3.20 மி.மீ அளவில் மழை பதிவாகியுள்ளது.